Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச உலகச் சுகாதார நிறுவனம் ஏற்பாடு

உலகச் சுகாதார நிறுவனம், தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச உலகச் சுகாதார நிறுவனம் ஏற்பாடு

(படம்: AFP/Fabrice Coffrini)

உலகச் சுகாதார நிறுவனம், தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஆப்பிரிக்கா, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேலும் பல நாடுகள் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகள் விமானச் சேவைகளைப் பிரிட்டன் தடை செய்துள்ளது.

டெல்ட்டா வகைக் கிருமியைவிடப் புதுவகை COVID-19 கிருமி எளிதில் பரவக்கூடியது என்று முதற்கட்ட ஆதாரங்கள் காட்டுவதாகப் பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) கூறினார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்புமருந்துகள், புதுவகைக் கிருமிக்கு எதிராகக் குறைந்த செயல்திறன் கொண்டிருக்கலாம் என அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்