Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகைப் பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவக்கூடும்: ஆய்வு

சீனாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதியவகைப் பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவக்கூடும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகைப் பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவக்கூடும்: ஆய்வு

(கோப்புப் படம்: Reuters/Stringer)

சீனாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதியவகைப் பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவக்கூடும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.

G4 எனப் பெயரிடப்பட்டுள்ள அது, 2009ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குப் பரவிய H1N1 சளிக்காய்ச்சலின் மரபணுவைக் கொண்டது.

மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய ஆற்றல் G4இல் இருப்பதாகச் சீனப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறினர்.

ஆய்வாளர்கள் 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பன்றிகள் மீது நடத்திய 30,000 சோதனைகளில் அது தெரியவந்தது.

மேலும், பன்றிகளுடன் வேலை செய்வோரில் 10.4 விழுக்காட்டினருக்கு ஏற்கனவே அந்தப் பன்றிக் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

மக்கள்தொகையில் 4.4 விழுக்காட்டினருக்கு அது இருக்கக்கூடும் என்று சோதனைகள் காட்டுகின்றன.

ஆனால், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அது பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

ஆய்வாளர்கள் பன்றிகளுடன் வேலை செய்வோரைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்