Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூ யார்க், புளோரிடா ஆகியவற்றில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

அமெரிக்காவின் நியூ யார்க் (New York), புளோரிடா (Florida) மாநிலங்களில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் நியூ யார்க் (New York), புளோரிடா (Florida) மாநிலங்களில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

நியூயார்க்

  • 24 மணி நேர ரயில் சேவை தொடங்கியுள்ளது.
  • 19 -ஆம் தேதி முதல், நகரின் கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், அரும்பொருளகங்கள் ஆகியவற்றில் வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படமாட்டாது. இருப்பினும் வாடிக்கையாளர்களிடையே 6 அடி பாதுகாப்பு இடைவெளி உறுதி செய்யப்படவேண்டும்.
  • வெளியிடங்களில் 500 பேர் வரை கூடலாம்.
  • உள்ளரங்குகளில் 250 பேர் வரை கூடலாம்.

புளோரிடா

அங்கு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் திட்டம் தொடரும் வேளையில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளதால், அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மாநிலத்தின் 23 மில்லியன் குடியிருப்பாளர்களில் சுமார் 9 மில்லியன் பேருக்குக் குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி மேயர்கள் சிலர், அந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்