Images
  • earthquake
    படம்: AFP/Dave Hunt

நியூஸிலந்து: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகும் இராணுவம்

வெல்லிங்ட்டன்: நியூஸிலந்து தற்காப்புப் படை தாம் சந்திக்கவிருக்கும் ஆகப் பெரிய பாதுகாப்பு சவாலாகப் பருவநிலை மாற்றத்தை வகைப்படுத்தியுள்ளது.

உலக வெப்பமயமாதல் தனது வளங்களின் மீதான செலவை அதிகரிகப்படுத்தும் என்று தற்காப்புப் படை தெரிவித்தது.

பருவநிலை மாற்றத்தால் பசிபிக் தீவுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அது தெரிவித்தது. 

மனிதாபிமான உதவி வழங்கும் நிலையேற்பட்டால், தற்காப்பு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் தற்காப்புப் படை கூறியது.

பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள வனுவாட்டு, ஃபிஜி ஆகிய நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டபோது அவற்றுக்கு நியூஸிலந்து தற்காப்புப் படை பெருமளவு உதவியது.


Top