Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளைத் தடைசெய்யும் நியூசிலந்து

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நியூசிலந்து தடை செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளைத் தடைசெய்யும் நியூசிலந்து

(படம்: AFP/Fred Dufour)

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நியூசிலந்து தடை செய்யவிருக்கிறது.

சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைக் குறைக்க, அடுத்த ஓராண்டுக்குள் அத்தகைய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு ஒழிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் கூறினார்.

பிளாஸ்டிக் பைகளை மில்லியன் கணக்கில் நியூசிலந்து பயன்படுத்துவதாகவும் இறுதியில் அவை கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு ஏற்படுத்துவதாகவும் திருமதி ஆர்டர்ன் சுட்டினார்.

நியூசிலந்தின் பசுமையான சுற்றுப்புறத்தைப் பேணிக்காக்க அவற்றைத் தடைசெய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

உலக அளவில் ஆண்டுதோறும், 5 டிரில்லியன் பிளாஸ்டிக் பைகள் வரை பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கை கூறுகிறது.

அதவாது நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்