Images
  • protest
    படம்: Reuters 

நியூஸிலந்து: பருவநிலை மாற்றத்தில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாக மாணவர்கள் கண்டனம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பருவநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கம் காட்டும் மெத்தனப்போக்கைக் கண்டித்து நியூஸிலந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தைக் குறிக்கும் வாசகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் தலைநகர் வெல்லிங்ட்டனில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி நடந்தனர்.

நியூஸிலந்து முழுவதிலும் 30 இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றிலும்  ஆர்ப்பாட்டங்களை நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Top