Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து: சௌத் ஐலந்தில் சுமார் ஓராண்டுக்குப் பின் முதல் தொற்றுச் சம்பவம்

நியூஸிலந்தில் 24 மணி நேர இடைவெளியில் மேலும் 104 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்து: சௌத் ஐலந்தில் சுமார் ஓராண்டுக்குப் பின் முதல் தொற்றுச் சம்பவம்

(படம்: REUTERS/Simon Watts)

நியூஸிலந்தில் 24 மணி நேர இடைவெளியில் மேலும் 104 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை ஆக்லந்தில் பதிவாயின.

இதற்கிடையே, அந்நாட்டின் சௌத் ஐலந்து (South Island) பகுதியில், ஓராண்டுக்குப் பிறகு, ஒருவருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து நோய் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்குப் பரவும் அபாயம் குறைவு என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே நியூஸிலந்து, அதன் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட முனைகிறது.

அது சாத்தியமானால், நடப்பில் உள்ள மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறியுள்ளார்.

அங்கு 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்