Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்து எரிமலை குமுறியதில் சிலருக்குக் காயம்

நியூசிலந்தின் ஒயிட் ஐலண்ட் (White Island) வட்டாரத்தில் எரிமலை குமுறி வருவதாக அந்நாட்டின் தேசிய அவசரகால நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நியூசிலந்து எரிமலை குமுறியதில் சிலருக்குக் காயம்

(படம்: Twitter/zurraspismo)

நியூசிலந்தின் ஒயிட் ஐலண்ட் (White Island) வட்டாரத்தில் எரிமலை குமுறி வருவதாக அந்நாட்டின் தேசிய அவசரகால நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.

அதனால் அந்த வட்டாரம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

எரிமலை குமுறத் தொடங்கியபோது சுமார் 100 பேர் ஒயிட் ஐலண்டில் இருந்தனர்.

அவர்களில் இருபது பேர் காயமடைந்தனர் என்று நியூசிலந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தீவில் இருப்போரை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்