Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க் நகரில் மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மின் தடையையடுத்துத் தற்போது மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
நியூயார்க் நகரில் மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது

படம்: Pixabay

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மின் தடையையடுத்துத் தற்போது மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

மின் தடையால் 70,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

மின்தடையில் சம்பந்தப்பட்டிருந்த 6 கட்டமைப்புகளும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக உள்ளூர் மின் விநியோக நிறுவனம் கூறியது.

துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே மின்தடைக்குக் காரணமாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வருங்காலத்தில் நகரின் மின்கட்டமைப்பை வலுவானதாய் வைத்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை தரப்போவதாக நியூயார்க் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மின்தடையால் சில ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், சுரங்க ரயில் நிலையங்கள் இருளில் மூழ்கியிருந்தன.

மின்தூக்கிகளில் மக்கள் சிக்கிக்கொண்டது தொடர்பில் பல அழைப்புகள் வந்தவண்ணம் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நியூயார்க்கின் பிரபல Times சதுக்கத்தின் பிரமாண்டமான திரைகளும் மின்தடையால் பாதிக்கப்பட்டிருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்