Images
  • whale death
    படம்: Twitter/Morgandonocoro

நியூஸிலந்தில் கரையொதுங்கிய திமிங்கிலங்களில் 10-க்கும் மேற்பட்டவை மாண்டன

நியூஸிலந்தின் கோரமண்டல் தீபகற்பப் (Coromandel Peninsula) பகுதியின் ஆழமில்லாத கரையோரத்தில் ஒதுங்கிய திமிங்கிலங்களில் 10-க்கும் மேற்பட்டவை மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 திமிங்கிலங்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கடலுக்குள் திரும்பின.

நேற்றிரவு கரையோரத்தில் அலைகள் அதிகமாக இருந்ததால் திமிங்கிலங்கள் மீண்டும் ஆழமான பகுதிக்குச் செல்ல முடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஆழமில்லாத கரையோரத்தில் சுமார் 50
திமிங்கிலங்கள் ஒதுங்கியதாகத் தெரிகிறது.

நேற்று மட்டும் 5 திமிங்கிலங்கள் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Top