Images
  • Nz
    படம்: AFP

நியூசிலந்து, குக் தீவுகள் உடனான பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது

நியூசிலந்து, குக் தீவுகள் உடனான பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

வரும் 17-ஆம் தேதி முதல், இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்வோர் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான தேவை இருக்காது.

இருப்பினும், அனைத்துத் தரநிலைகளும் எட்டப்பட்டால் மட்டுமே அந்தப் பயண ஏற்பாடுகள் தொடங்கும்.

விமானச் சேவை, விமான நிலையம் ஆகியவற்றின் தயார்நிலை போன்றவையும் அவற்றுள் அடங்கும்.

அந்த ஏற்பாட்டுக்கு இரு நாட்டுச் சுகாதார அதிகாரிகளும் இறுதி ஒப்புதல் வழங்கவேண்டும்.

நியூசிலந்து, ஆஸ்திரேலியா, குக் தீவுகள் ஆகியவற்றுக்கு இடையிலான பயணங்களை வரவேற்பதாக நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறினார்.

ஆனால் அந்த முத்தரப்புப் பயண ஏற்பாட்டுக்கு குக் தீவுகளின் அதிகாரிகள் ஒப்புதல் வழங்க வேண்டும்.

Top