Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நயாகரா அருவியிலிருந்து விழுந்து தப்பிப் பிழைத்தவர்

உலகின் ஆகப் பெரிய நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
நயாகரா அருவியிலிருந்து விழுந்து தப்பிப் பிழைத்தவர்

படம்: Daniel SLIM/AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

உலகின் ஆகப் பெரிய நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.

நயாகராவின் கிளை அருவியான ஹார்ஸ்ஷூ அருவியில் விபத்து நேர்ந்தது. 57 மீட்டர் ஆழத்தில் ஒருவர் உதவிக்குக் காத்திருப்பதாக நயாகரா பூங்கா காவல்துறையினருக்கு அதிகாலை 4 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

உடனடியாகக் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அந்த ஆடவர் அருவியின் விளிம்பில் உள்ள ஆற்றின் தடுப்புச் சுவரைப் பற்றி மேலே ஏறி ஒரு பாறையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவருக்கு எந்தக் காயமும் இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல்.

அருவியில் தவறி விழுந்தவர் யார் என்ற அடையாளத்தைக் காவல்துறையினர் வெளியிடவில்லை.

எந்த ஒரு கவசமும் அணியாமல் நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர்களில் நால்வர் இதுவரை உயிர் தப்பியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்