Images
  • Nice Firecrackers
    (படம்: AFP/Eric FEFERBERG) 

உலகக் கிண்ணத்தின்போது நீஸில் கூட்ட நெரிசல்; 27 பேர் காயம்


பிரான்ஸின் நீஸ் (Nice) நகரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பேர் காயமடைந்தனர். உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில் பிரான்ஸ் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், அங்கு பட்டாசுகள் ஏற்ற்பட்டன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அந்த விபத்து நேர்ந்தது.

சம்பவம் நேற்று (ஜூலை 10) நடந்தது.

இரண்டு ஆண்டுக்கு முன்னர், பிரான்ஸின் தேசிய தினமான பஸ்டீல் தினத்தன்று (Bastille Day) நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நகர மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வந்துள்ளனர்.

இருப்பினும், உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில், பிரான்ஸ் அரையிறுதிச் சுற்றில் வெற்றியடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், அத்தகைய துயரச் சம்பவம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பட்டாசுகள் ஏற்றப்பட்டவுடன் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அதனால் பயமுற்ற மற்ற பார்வையாளர்கள் தப்பிக்க முற்பட்டதில் 27 பேருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பலருக்கு கண்ணாடித் துண்டுகளால் ஏற்பட்ட காயங்களும் நெரிசலில் விழுந்தபோது ஏற்பட்ட காயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

Top