Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கடத்தல்காரர்கள் என்று நினைத்து காவல் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்ற நைஜீரிய வீரர்கள்

நைஜீரியாவில் கடத்தல்காரர் ஒருவரைப் பிடிக்கப்போன ராணுவ வீரர்கள், தவறுதலாகக் காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக்கொன்றனர்.

வாசிப்புநேரம் -
கடத்தல்காரர்கள் என்று நினைத்து காவல் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்ற நைஜீரிய வீரர்கள்

(படம்: AFP)

நைஜீரியாவில் கடத்தல்காரர் ஒருவரைப் பிடிக்கப்போன ராணுவ வீரர்கள், தவறுதலாகக் காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக்கொன்றனர்.

சம்பவத்தில் 3 காவல் அதிகாரிகளும் பொதுமக்களில் ஒருவரும் தவறுதலாகக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

வீரர்களின் கவனக்குறைவான செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடத்தப்பட்டவரைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில், ராணுவ அதிகாரிகள் கடத்தல்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

நால்வரைச் சரமாரியாகச் சுட்டுக்கொன்றனர்.

ஆனால் அவர்கள் சுட்டது, கடத்தல்காரர்களை அல்ல, ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை என்பது பின்னர் தெரியவந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்