Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Nike நிறுவனத்திற்கு 12.5 மில்லியன் யூரோ அபாரதம்

காற்பந்துப் பொருள்கள் நாடு கடந்து விற்பனை செய்யப்படுவதை தடுத்ததற்காக Nike நிறுவனத்திற்கு 12.5 மில்லியன் யூரோ அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Nike நிறுவனத்திற்கு 12.5 மில்லியன் யூரோ அபாரதம்

படம்: REUTERS/Carlo Allegri

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காற்பந்துப் பொருள்கள் நாடு கடந்து விற்பனை செய்யப்படுவதை தடுத்ததற்காக Nike நிறுவனத்திற்கு 12.5 மில்லியன் யூரோ அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நம்பகத்தன்மைச் சட்டத்தை மீறும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு அந்த அபாரதத்தை விதித்துள்ளது.

2004 லிருந்து 2017ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 5 ஐரோப்பியக் காற்பந்து குழுக்களுக்கும் ஒரு காற்பந்து சம்மேளத்திற்கும் சொந்தமான பொருட்களை விற்பனை செய்வதை Nike நிறுவனம் தடை செய்ததாகத் தெரியவந்தது.

அதன் தொடர்பில் ஈராண்டுகள் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்