Images
  • biden (4)
    (படம்: AFP/Mandel Ngan)

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தின் புதிய கொள்கை மறுஆய்வு- வட கொரியா அதிருப்தி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மேற்கொண்ட புதிய கொள்கை மறுஆய்வு, வடகொரியாவைச் சினமூட்டியுள்ளது.

வடகொரிய வெளியுறவு அமைச்சின் அறிக்கையை அந்நாட்டின் KCNA செய்தி நிறுவனம் வெளியிட்டது.

பியோங்யாங்கிற்கு எதிராய் தொடர்ந்து பகைமையுடன் நடந்துகொள்ளும் திரு. பைடனின் மனப்போக்கை அந்த மறுஆய்வு சுட்டிக்காட்டுவதாக வடகொரியா கூறியது.

கெடுபிடிப் போர் கொள்கைகளை தொடர்ந்து கையாண்டால், வாஷிங்டன் மோசமான நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றும் வடகொரியா சொன்னது.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம், மோசமான மிரட்டல் ; அதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று அதிபர் பைடன் முன்னதாக வருணித்திருந்தார்.

அவர் அவ்வாறு கூறியிருப்பது வடகொரியாவிற்கு அதிருப்தி அளித்தது.

வடகொரியாவின் மனித உரிமை சூழலைத் திரு. பைடன் குறைகூறியதால் அவர் நாட்டின் தலைமைத்துவத்தை அவமதித்திருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்காவின் குறைகூறல் சினமூட்டுவதாய் KCNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்கா அவ்வாறு செய்வது, வடகொரியாவுடன் மோதுவதற்குத் தயாராவதைக் காட்டுவதாக நிறுவனம் சொன்னது.

அதற்கு ஏற்ப பதிலடி வழங்கப்படும் என்றும் அது கூறியது.

-Reuters  

Top