Images
  • NK Unidentified Projectiles
    (கோப்புப்படம்:  KCNA/via REUTERS)

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள், அண்டை நாடுகளுக்கு மிரட்டலாக அமைகின்றன: அமெரிக்க ராணுவம்

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் அதன் அண்டை நாடுகளுக்கு மிரட்டலாக அமைகிறதென அமெரிக்க ராணுவம் கருத்துத் தெரிவித்துள்ளது.

வடகொரியா அதன் ராணுவத் திட்டத்தை மேம்படுத்திக்கொள்வதை ஏவுகணைச் சோதனைகள் காட்டுகின்றன என்று அது குறிப்பிட்டது.

அவை வடகொரியாவின் அண்டை நாடுகளுக்கும் அனைத்துலகச் சமூகத்துக்கும் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளன என்றும் அது குற்றஞ்சாட்டியது.

வடகொரியா சோதித்த ஏவுகணைகள் 1,500 கிலோமீட்டர் தூரம் சென்று வடகொரியக் கடலுக்குள் விழுந்தன.

நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் நட்புநாடுகளுடன் இதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபத்தியத்தின் அறிக்கை கூறியது.

தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பாதுகாப்பு வழங்கும் தனது கடப்பாட்டை அமெரிக்கா மறுஉறுதிப்படுத்தியது.

-AFP/dv 

Top