Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியாவில் முழுமையான அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஏவுகணைச் சோதனைத் தளங்களில் எவ்வித நடவடிக்கையும் இடம்பெற்றதற்கான அறிகுறி இல்லை என்று கண்காணிப்புக் குழு ஒன்று சென்ற வாரம் கூறியிருந்தது. வடகொரியாவின் 8 சோதனைத் தளங்களில் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தும்வகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அது தெரிவித்திருந்தது.

வாசிப்புநேரம் -
வடகொரியாவில் முழுமையான அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: Olivier Douliery/AFP)

வடகொரியா முழுமையான அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய திரு. டிரம்ப், மிகப் பெரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாய்ப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

பியோங்யாங் அதன் 4 பெரிய சோதனைத் தளங்களை அழித்துவிட்டதாக அவர் கூறினார்.

வடகொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட எவ்வித ஏவுகணையையும் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டதாகவும், முக்கியச் சோதனைத் தளம் அழிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் கூறினார்.

சிங்கப்பூரில் நடந்த உச்சநிலைச் சந்திப்புக்குப் பிறகு, அணுவாயுதக் களைவின் தொடர்பில், வடகொரியா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்த அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ், அதிபரின் அண்மை அறிவிப்பு குறித்து ஏதும் கருத்துரைக்கவில்லை.

ஏவுகணைச் சோதனைத் தளங்களில் எவ்வித நடவடிக்கையும் இடம்பெற்றதற்கான அறிகுறி இல்லை என்று கண்காணிப்புக் குழு ஒன்று சென்ற வாரம் கூறியிருந்தது.

வடகொரியாவின் 8 சோதனைத் தளங்களில் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தும்வகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அது தெரிவித்திருந்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்