Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத் தாக்குதல்-வடகொரியாவுக்குத் தொடர்பு இருக்கிறதா?

உலகின் பல நாடுகளின் இணையக் கட்டமைப்பைப் பாதித்த இணையத் தாக்குதலில் வட கொரியாவுக்குத் தொடர்பு இருக்கிறதா?

வாசிப்புநேரம் -
இணையத் தாக்குதல்-வடகொரியாவுக்குத் தொடர்பு இருக்கிறதா?

(லண்டனில் பாதிப்புக்குள்ளான இணையக்கட்டமைப்பு. படம்: PA via AP)

உலகின் பல நாடுகளின் இணையக் கட்டமைப்பைப் பாதித்த இணையத் தாக்குதலில் வட கொரியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பல நாடுகளின் கணினி கட்டமைப்பை நிலைகுலையச் செய்த அந்தத் தாக்குதல்களின் தொடர்பில் கிடைத்திருக்கும் முதல் தடயம் அது எனக் கருதப்படுகிறது. 

கூகள் ஆய்வாளர் நீல் மேத்தா, "WannaCry" எனும் நச்சு நிரலுக்கும், பியோங்யாங்கின் இணைய ஊடுருவலுக்கும் தொடர்புடைய இணையக் குறியைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

கிடைத்திருக்கும் தடயம் முக்கியமான ஒன்று என ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட காஸ்பர்ஸ்கி பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்