Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பிரிட்டிஷ் இளையருக்கு இனி எந்த நாட்டிலும் இடமில்லை

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பிரிட்டிஷ் இளையரின் குடியுரிமையை பிரிட்டன் பறித்ததைத் தொடர்ந்து, அவருக்கு பங்களாதேஷிலும் இடமில்லை என டாக்கா கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பிரிட்டிஷ் இளையருக்கு இனி எந்த நாட்டிலும் இடமில்லை

படம்: AFP/LAURA LEAN

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பிரிட்டிஷ் இளையரின் குடியுரிமையை பிரிட்டன் பறித்ததைத் தொடர்ந்து, அவருக்கு பங்களாதேஷிலும் இடமில்லை என டாக்கா கூறியிருக்கிறது.

ஷமிமா பேகம் எனப் பெயரிய அந்த 19 வயதுப் பெண் பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அவர் பங்களாதேஷில் குடியுரிமை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம் என வெளிவந்த தகவல்களுக்கு டாக்கா அவ்வாறு பதிலளித்தது.

ஷமிமா, பங்களாதேஷ் குடிமகள் அல்ல என்றும், இரட்டைக் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பம் செய்ததில்லை என்றும், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு கூறியது.

2015ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர ஷமிமா பிரிட்டனிலிருந்து வெளியேறினார்.

இப்போது மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்ப அவர் முயன்று வருகிறார்.

இருப்பினும் அவரின் குடியுரிமை ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக, பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அவரின் வழக்கறிஞரிடம் கூறியது.

பிரிட்டனின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக, ஷமிமாவின் வழக்கறிஞர் கூறினார்.

அந்த விவகாரம் பிரிட்டனில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேசியப் பாதுகாப்பின் அடிப்படையில், சிலர் அதற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

அது சட்டபூர்வமான நடவடிக்கையா என மற்ற சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்