Images
  • Nobel prize ph
    படம்: AFP

பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிவரும் இருவருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு

பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடி வரும் இருவருக்கு வரும் திங்கட்கிழமை டிசம்பர் 9ஆம் தேதி அமைதிக்கான நொபெல் பரிசு வழங்கப்படும்.

காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வெகெ (Denis Mukwege), யஸிடி(Yazidi) இன ஆர்வலரான நாடியா முராட் (Nadia Murad) ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.

போர் ஆயுதமாகப் பாலியல் பலாத்காரம் எவ்வாறு புரியப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்ட இந்த ஆண்டின் அமைதிக்கான நொபெல் பரிசு திட்டமிட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 25 வயது முராட்டுக்கும் 63 வயது முக்வெகெக்கும் பரிசு வழங்கப்படும்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவின் கிழக்குப் பகுதியில் முக்வெகெ கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.

உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தகைய பெண்களுக்கு அவர் ஆறுதல் அளிக்கிறார்.

யஸிடி இன மக்களின் உரிமைக்காக முராட் போராடிவருகிறார்.

2014ஆம் ஆண்டில் அவர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்.

பாலியல் வன்முறைக்கும் ஆளான அவர் அதிலிருந்து மீண்டு அவரைப் போலவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்காகப் போராடிவருகிறார்.

Top