Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நொபெல் பரிசை வென்ற ஆக வயதானவர் ஆகியுள்ளார் ஜான் B. குட்டினாஃப்

நொபெல் பரிசை வென்ற ஆக வயதானவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜான் B. குட்டினாஃப் (John B. Goodenough).

வாசிப்புநேரம் -
நொபெல் பரிசை வென்ற ஆக வயதானவர் ஆகியுள்ளார் ஜான் B. குட்டினாஃப்

(படம்: AFP)

நொபெல் பரிசை வென்ற ஆக வயதானவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜான் B. குட்டினாஃப் (John B. Goodenough).

97 வயதில் அவர் ரசாயனத்துக்கான நொபெல் பரிசை இணைந்து வென்றுள்ளார்.

இதற்கு முன் 96 வயதில் நொபெல் பரிசைப் பெற்று ஆக வயதான நொபெல் பரிசு வெற்றியாளர் என்ற அங்கீகாரத்தை ஆர்தர் எஷ்கின் (Arthur Ashkin) பெற்றிருந்தார்.

Lithium-ion மின்கலன்களின் மேம்பாட்டு ஆய்வுகளில் பங்காற்றியதற்காக குட்டினாஃப், ஸ்டென்லீ விட்டிங்ஹமுடனும் அகிரா யொஷினோவுடனும் (Stanley Whittingham, Akira Yoshino) விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

குட்டினாஃப் 1922இல் ஜெர்மனியில் பிறந்தார்.

1952இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (University of Oxford) பணிபுரிந்த காலத்தில் அவருடைய கண்டுபிடிப்புக்காக குட்டினஃப் நொபெல் பரிசைப் பெற்றுள்ளார்.

97 வயதில் படுக்கையை விட்டு எழுவதே பெரும்பாலானவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கும்போது நொபெல் பரிசுகூட வாங்க முடியும் என்று நிரூபித்து உலகை வியக்கவைத்திருக்கிறார் குட்டினாஃப்.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்