Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து; கிம்-டிரம்ப் சந்திப்பு குறித்து சந்தேகம்

தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து; கிம்-டிரம்ப் சந்திப்பு குறித்து சந்தேகம்

(படம்: Korea Summit Press Pool/Pool via Reuters)

தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து செய்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

இரு கொரியாக்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த சந்திப்பை, வடகொரியா ரத்துசெய்ததாக, தென்கொரியா சொன்னது.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் அதற்குக் காரணம் என வடகொரியாவின் அதிகாரத்துவச் செய்தி நிறுவனம் KCNA கூறியதாக, தென்கொரியா தெரிவித்தது.

அந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, தூண்டுதல் நடவடிக்கை என வடகொரியா வருணித்தது.

வேறு வழியின்றி வடகொரியா இருதரப்பு சந்திப்பை ரத்து செய்வதாகவும் அது குறிப்பிட்டது.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்கும் உறுதி பற்றி கலந்துபேச, இரு கொரியாக்களும் சந்திக்கவிருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்