Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப்-கிம் இரண்டாம் சந்திப்பு : அமெரிக்காவுக்கான வடகொரியப் பிரதிநிதி பெய்ச்சிங் சென்றடைந்தார்

அமெரிக்காவுக்கான வடகொரியப் பிரதிநிதி வியட்நாம் செல்லும் வழியில் சீனத் தலைநகர் பெய்ச்சிங் சென்றடைந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் இரண்டாம் சந்திப்பு : அமெரிக்காவுக்கான வடகொரியப் பிரதிநிதி பெய்ச்சிங் சென்றடைந்தார்

(படம்: AFP/Saul Loeb)

அமெரிக்காவுக்கான வடகொரியப் பிரதிநிதி வியட்நாம் செல்லும் வழியில் சீனத் தலைநகர் பெய்ச்சிங் சென்றடைந்துள்ளார்.

திரு. கிம் யொக் சொல் (Kim Hyok Chol) ஹனோயில் வடகொரியாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீஃபன் பேகனைச் சந்தித்துப் பேசுவார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உச்சநிலைச் சந்திப்புக்கு முன்னர் அவருடைய பயணம் அமைந்துள்ளது.

வட கொரியப் பிரதிநிதி, இம்மாதத் தொடக்கத்தில் திரு. பேகனைப் பியோங்யாங்கில் சந்தித்துப் பேசினார்.

வடகொரியாவின் அணுவாயுதக் களைவு தொடர்பில் இருதரப்பு நிலைப்பாடு குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாகக் குறிப்பிட்ட திரு. பேகனைச், இன்னும் அதிகம் கலந்துரையாடவேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

விரைவில் அவரும் ஹனோய் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்