Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியாவுக்கு உதவி தேவை: ஐக்கிய நாட்டு நிறுவனம்

வடகொரியாவுக்குப் பெரிய அளவிலான உதவி தேவை என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் மார்க் லோகோக் (Mark Lowcock) கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

வடகொரியாவுக்குப் பெரிய அளவிலான உதவி தேவை என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் மார்க் லோகோக் (Mark Lowcock) கூறியுள்ளார்.

வடகொரியாவில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

தாம் வடகொரியாவிற்கு மேற்கொண்ட அரிய பயணத்தின்போது அதைக் கண்டதாக அவர் கூறினார்.

கிராமங்களில் வசிக்கும் பாதிக்கும் அதிகமான சிறுவர்களுக்குத் தூய்மையான தண்ணீர் வசதிகள் இல்லை என்று தமது Twitter பக்கத்தில் அவர் பதிவு செய்தார்.

தாம் சென்றுபார்த்த மருத்துவமனை ஒன்றில் 140 காச நோயாளிகள் இருந்ததாகவும் அவர்களில் 40 பேருக்கு மட்டுமே மருந்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடகொரியாவின் 25 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10.6 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.

வடகொரியாவின் அணுவாயுத மிரட்டல்களால் அதன்மீது ஐக்கிய நாட்டு நிறுவனம் பல தடைகளை விதித்தது.

அதனால் அதன் வர்த்தகம் நலிவடைந்த நிலையில் உள்ளது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்