Images
  • trump (4)
    (படம்:  REUTERS/Leah Millis)

வடகொரியா மீதான தடைகளைத் தென்கொரியா அமெரிக்காவின் ஒப்புதலின்றி அகற்றாது - டிரம்ப்

பியோங்யாங் மீதான தடைகளைத் தென்கொரியா அமெரிக்காவின் ஒப்புதல் பெறாமல் அகற்றாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒருதலைப்பட்சமாகக் கருதப்படும் சில தடைகள் மறுஆய்வு செய்யப்பட்டதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து திரு. டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடகொரியா மீதான தடைகளை அமெரிக்காவின் நட்பு நாடுகள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வடகொரியா அணுவாயுதங்களைக் களையும் வரை அது நீடிக்க வேண்டும் என்றார் திரு. டிரம்ப்.  

Top