Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வட கொரியாவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சில் அமெரிக்காவிற்கு அவசரம் இல்லை: அதிபர் டிரம்ப்

வட கொரியாவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு அவசரம் ஏதும் இல்லை என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
வட கொரியாவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சில் அமெரிக்காவிற்கு அவசரம் இல்லை: அதிபர் டிரம்ப்

(படம்: AFP/Saul Loeb)

வட கொரியாவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு அவசரம் ஏதும் இல்லை என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அணுவாயுதக் களைவு தொடர்பில் விரைவில் உடன்பாடு ஏற்படும் சாத்தியமில்லை என்பதை அதிபர் டிரம்பின் Twitter பதிவு காட்டியது.

வட கொரியாவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சின் முன்னேற்றம் பற்றி பலர் தம்மிடம் கேள்வி கேட்பதாகவும் அமெரிக்காவிற்கு அவசரம் ஏதுமில்லை எனத் தாம் பதிலளிப்பதாகவும் அவர் Twitter பக்கத்தில் கூறினார்.

இருப்பினும், அணுவாயுதக் களைவினால் வட கொரியப் பொருளியலுக்கு ஏற்படக்கூடிய நன்மை குறித்து அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு இருநாட்டுக்கும் இடையே மீண்டும் உச்சநிலைச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அணுவாயுதக் களைவில் முன்னேற்றம் இல்லாதது குறித்து அதிபர் டிரம்ப் குறைகூறலுக்கு ஆளாகியிருக்கிறார்.

வட கொரியா அணுவாயுதக் களைவை முழுதாக நிறைவேற்றும் வரை அதன் மீதான ஐக்கிய நாட்டு நிறுவனத் தடைகள் நீடிக்கும் என அமெரிக்கா கூறி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்