Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவுடன் சந்திப்பு நடத்த வடகொரியா இன்னும் தயார்

அமெரிக்காவுடன் வடகொரியா நடத்தவிருந்த சந்திப்புக்கு வடகொரியா இன்னும் தயார்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடன் சந்திப்பு நடத்த வடகொரியா இன்னும் தயார்

(படம்: Korea Summit Press Pool/AFP)

அமெரிக்காவுடன் வடகொரியா நடத்தவிருந்த சந்திப்பு ரத்துசெய்யப்பட்டபோதும் அந்தப் பேச்சை நடத்துவதற்குத் தான் இன்னமும் தயாராக இருப்பதாக வட கொரியா இன்று தெரிவித்தது.

இரு நாட்டு சந்திப்பை அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் ரத்து செய்தது வருந்தத்தக்கது என்றும் வடகொரியா குறிப்பிட்டது.

சந்திப்பு ரத்து செய்யப்படும் முடிவு எதிர்பாராத ஒன்று என்று வடகொரியாவின் முதல் துணை வெளியுறவு அமைச்சர் கிம் கை குவான் (Kim Kye Gwan) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

வடகொரியாவுடன் சந்தித்துப் பேச, இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் முயற்சி எடுக்கவில்லை. ஆகவே, அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சியை உயர்வாகக் கருதியதாக திரு கிம் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவு உலக நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது. சந்திப்பு இடம்பெறுவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் பெரும் முயற்சி எடுத்ததாகவும் திரு கிம் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்