Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்று: வடகொரியா மீதான தடைகளுக்கு விலக்கு அளிக்கும்படி நிவாரண உதவிக் குழுக்கள் கோரிக்கை

வடகொரியாவில் இதுவரை COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகவில்லை என்றாலும், சீனாவிற்கு வெகு அருகில் இருக்கும் அந்நாட்டில் கிருமிப் பரவல் ஏற்படலாம் என்பது குறித்து ஆழ்ந்த கவலையடைவதாய் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று: வடகொரியா மீதான தடைகளுக்கு விலக்கு அளிக்கும்படி நிவாரண உதவிக் குழுக்கள் கோரிக்கை

(படம்: AFP/KCNA via KNS)

வடகொரியாவில் இதுவரை COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகவில்லை என்றாலும், சீனாவிற்கு வெகு அருகில் இருக்கும் அந்நாட்டில் கிருமிப் பரவல் ஏற்படலாம் என்பது குறித்து ஆழ்ந்த கவலையடைவதாய் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களின் தொடர்பில் அமெரிக்காவும், ஐக்கிய நாட்டு நிறுவனமும் வடகொரியா மீது விதித்துள்ள தடைகளுக்கு விலக்கு அளிக்கும்படி நிவாரண உதவிக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

செஞ்சிலுவைச் சங்கம் வடகொரியாவுக்குப் பணமாற்றுச் சேவைக்கு அனுமதி கேட்டுள்ளது. உயிர்காப்பு நடவடிக்கையாக அது கருதப்படவேண்டும் என்று சங்கம் கூறியது.

தனிநபர் பாதுகாப்புக் கவச உடை, பரிசோதனைச் சாதனங்கள் போன்றவை உடனடியாகத் தேவைப்படும் நிலை பற்றியும் அது குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்