Images
  • nk sweden
    (படம்: Reuters)

வட கொரியக் குழு சுவீடனுக்குப் பயணம்

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

வட கொரியத் தலைமை அணுவாயுதப் பேரப்பேச்சாளர் கிம் மியோங் கில்லின் (Kim Myong Gil) தலைமையில் வட கொரியக் குழுவினர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குச் (Stockholm) சென்று சேர்ந்துள்ளனர்.

அங்கு அவர்கள் அமெரிக்காவுடன் அணுவாயுதக் களைவு குறித்துப் பேச்சு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியோங்யாங் வெற்றிகரமாய் நீர்முழ்கியில் இருந்து புவி ஈர்ப்பு ஏவுகணைச் சோதனை நடத்தியதை உறுதிப்படுத்திய பின்னர் அந்தப் பேச்சு நடைபெறவுள்ளது.

Puk-guk-song-3 என்றழைக்கப்படும் அந்த ஏவுகணைச் சோதனை, தனது தற்காப்புத் திறனை மேம்படுத்தும் புதிய சாதனை என பியோங்யாங் வருணித்துள்ளது.

ஆனால், அந்த ஏவுகணை பியோங்யாங் அறிவித்ததுபோல் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்பட்டதுபோல் தெரியவில்லை என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மாறாக அது, கப்பல் ஒன்றின் மேல்தளத்திலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கலாமென வாஷிங்டன் குறிப்பிட்டது. சினமூட்டக்கூடிய தேவையற்ற சோதனைகளை நிறுத்தும்படி அது பியோங்யாங்கை வலியுறுத்தியது.

இதற்கிடையே, வட கொரிய விவகாரம் குறித்து ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் இன்று தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனம், பியோங்யாங் மீதான நெருக்குதலைத் தொடர வேண்டுமென, ஐரோப்பியத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள் அதற்குக் காரணம். 

Top