Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனித உரிமை குறித்த விவாதம் வேண்டாம் - ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திற்கு வடகொரியா எச்சரிக்கை

வடகொரிய மனித உரிமைச் சூழல் குறித்து விவாதிக்க வேண்டாம் என ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தைப் பியோங்யாங் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மனித உரிமை குறித்த விவாதம் வேண்டாம் - ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திற்கு வடகொரியா எச்சரிக்கை

படம்: REUTERS/Brendan McDermid

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வடகொரிய மனித உரிமைச் சூழல் குறித்து விவாதிக்க வேண்டாம் என ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தைப் பியோங்யாங் கேட்டுக்கொண்டுள்ளது.

மன்றத்தில் அவ்வாறு விவாதிக்கப்பட்டால் அது சினமூட்டும் செயலாகக் கருதப்படும் என வடகொரியா கூறியது.

அத்தகைய நடவடிக்கையைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பியோங்யாங் எச்சரித்தது. 

பாதுகாப்பு மன்றத்திற்கான வடகொரிய தூதர் கிம் சோங் அந்த எச்சரிக்கையைக் கடிதம்மூலம் விடுத்ததாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்