Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரானுக்கு விடுமுறைக்காகச் சென்ற நார்வே அமைச்சர் பதவி விலகியுள்ளார்

நார்வே மீன்வளத் துறை அமைச்சர் விடுமுறையைக் கழிக்க பாதுகாப்பு விதிகளை மீறி ஈரான் சென்றதைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார். 

வாசிப்புநேரம் -
ஈரானுக்கு விடுமுறைக்காகச் சென்ற நார்வே அமைச்சர் பதவி விலகியுள்ளார்

(படம்: AFP/Audun Braastad)

நார்வே மீன்வளத் துறை அமைச்சர் விடுமுறையைக் கழிக்க பாதுகாப்பு விதிகளை மீறி ஈரான் சென்றதைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார்.

58 வயது பெர் செண்ட்பெர்க் (Per Sandberg) தமது 28 வயது ஈரானியக் காதலியுடன் சென்றிருந்தார்.

அதுபற்றிப் பிரதமர் அலுவலகத்தில் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர் ஈரான் சென்றார்.

விடுமுறைக்காகச் சென்ற அவர் வேலைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்தொலைபேசியையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார்.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஈரானும் ஒற்றர் சேவைகளை நடைமுறைப்படுத்தும் நாடாகக் கருதப்படுவதாக நார்வே வேவுத்துறை அமைப்பினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

வேலைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்தொலைபேசியை ஈரானுக்குக் கொண்டு சென்றது நார்வேயின் பாதுகாப்பை ஆபத்தில் கொண்டுபோய் விட்டதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.

அவரின் கவனக்குறைவை எதிர்க்கட்சியினரும் அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

செண்ட்பெர்க் தாமே முன்வந்து பதவி விலகியிருப்பது சரியான முடிவு என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறியுள்ளார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்