Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Notre Dame தேவாலயத்தில் ஈஸ்ட்டர் பிரார்த்தனைக் கூட்டம் இடம்பெறவில்லை

பாரிஸின் Notre-Dame தேவாலயத்தில் நடைபெறவேண்டிய ஈஸ்ட்டர் பிரார்த்தனைக் கூட்டம், அருகிலுள்ள வேறொரு தேவாலயத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Notre Dame தேவாலயத்தில் ஈஸ்ட்டர் பிரார்த்தனைக் கூட்டம் இடம்பெறவில்லை

படம்: AFP/Ludovic Mari

பாரிஸின் Notre-Dame தேவாலயத்தில் நடைபெறவேண்டிய ஈஸ்ட்டர் பிரார்த்தனைக் கூட்டம், அருகிலுள்ள வேறொரு தேவாலயத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயின் (Seine) ஆற்றின் மறுகரையில் அந்தப் பிரார்த்தனை இடம்பெறவிருக்கிறது.

அண்மையில் மூண்ட தீயில் Notre Dame தேவாலயத்தின் கூரை முற்றாக அழிந்தது அதற்குக் காரணம்.

தீச்சம்பவத்தில் தேவாலயம் பெருத்த சேதமடைந்ததால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பொதுமக்கள் அதனுள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளைக் குறிக்கும் வகையில், உலகெங்கும் இருக்கும் கிறிஸ்துவர்கள் ஈஸ்ட்டர் தினத்தை அனுசரிக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்