Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸின் உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ

பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் மூண்ட பெருந் தீயில், அதன் கூம்பு வடிவக் கோபுரத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பாரிஸின் உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ

(படம்: AFP/Geoffroy VAN DER HASSELT)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் மூண்ட பெருந் தீயில், அதன் கூம்பு வடிவக் கோபுரத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் கூர்நுனி பெயர்ந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும், தேவாலயக் கூரை முற்றிலும் இடிந்து விழாமல் காப்பாற்றப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடிவருகின்றனர்.

சம்பவத்தில் ஒரு தீயணைப்பாளருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தேவாலயத் தீச் சம்பவத்தை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரையை ரத்துசெய்துவிட்டு, சம்பவ இடத்துக்கு அவர் விரைந்தார்.

பாரிஸின் முக்கிய அடையாளச் சின்னகளில் ஒன்றான அந்தத் தேவாலயத்தின் உட்புறத்திலுள்ள கலை வேலைப்பாடுகள் அழிந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Seine ஆற்றின் நடுவே அமைந்துள்ள Notre Dame தேவாலயத்தில் தீ மூண்டது குறித்து பாரிஸ் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் விசாரணை மேற்கொள்கிறது.

காவல்துறை அதனை விபத்தாகக் கருதுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்