உறுதியளிக்கப்பட்ட நன்கொடையில் மிகச் சிறு பங்கை மட்டுமே பெற்றுள்ள Notre Dame தேவாலயம்
பாரிசிலுள்ள நோட்ரெ டேம் (Notre Dame) தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகளுக்காக நன்கொடை வழங்க உறுதி கூறியோர், தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவர் என, தேவாலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன்னர், நோட்ரெ டேம் தேவாலயம் தீயால் கடுமையாகச் சேதமுற்றது.
தீ விபத்தைத் தொடர்ந்து, அதன் சீரமைப்புப் பணிகளுக்காக பல நூறு மில்லியன் வெள்ளி நன்கொடையாக வழங்கப் பல்வேறு தரப்பினர் உறுதி கூறியுள்ளனர்.
ஆனால் அதில் ஒரு சிறு பங்கு மட்டுமே இதுவரை திரட்டப்பட்டுள்ளது.