Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரெஞ்சு அதிபர் தொலைபேசி எண் கசிந்ததா? - இஸ்ரேலிய நிறுவனத்திற்கு நெருக்கடி

பிரெஞ்சு அதிபர் தொலைபேசி எண் கசிந்ததா? - இஸ்ரேலிய நிறுவனத்திற்கு நெருக்கடி 

வாசிப்புநேரம் -

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron), அவருடைய உயர் அதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த NSO நிறுவனம், திரு. மக்ரோன் உட்பட சுமார் ஐம்பதாயிரம் பேரின் தொலைபேசி எண்களைக் கண்காணிப்பதாகத் தெரியவந்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் ரகசியமாக நிறுவும் வசதியுள்ள நச்சு மென்பொருளை அந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
எனேவே, தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

தொலைபேசி எண் கசிந்திருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மை என்றால் அது மிகக் கடுமையானது என்று திரு. மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அது பற்றி அதிகாரிகள் புலனாய்வு நடத்துவர் என்று கூறப்பட்டது.

பயங்கரவாதம், குற்றச்செயல்கள் ஆகியவற்றை முறியடிக்கப் போராடும் அமலாக்க அமைப்புகள், சட்டத்துக்குட்பட்ட முறையில் தங்கள் மென்பொருளைப் பயன்படுத்துவதாக NSO நிறுவனம் கூறி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்