Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: நியூ சௌத் வேல்ஸில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம்

ஆஸ்திரேலியா: நியூ சௌத் வேல்ஸில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம் 

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: நியூ சௌத் வேல்ஸில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம்

படம்: REUTERS

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் நோய்ப்பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இம்மாதம் 25ஆம் தேதி மேலும் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாநிலத்தில் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் கணிசமாக அதிகரித்துவருவதே அதற்குக் காரணம்.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் கட்டுப்பாடுகளால் பல்வேறு நடவடிக்கைகள் நூறு நாளுக்கும் மேல் முடக்கப்பட்டிருந்தன.

அவை சற்றுத் தளர்த்தப்பட்டு, பல வர்த்தகங்களும் சேவைகளும் நேற்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

அங்கு தற்போது 74 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 90 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது.

இதே வேகத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடர்ந்தால், அடுத்த வார இறுதிக்குள் அங்கு இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டை எட்டக்கூடும்.

அப்போது சிட்னி நகரவாசிகள், மற்ற வட்டாரங்களுக்குப் பயணம் செய்யவும் வீட்டுக்குக் கூடுதலான விருந்தினரை அழைக்கவும் அனுமதிக்கப்படலாம்.

நியூ சௌத் வேல்ஸில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளன.

அங்கு புதிதாக 360 பேருக்குக் கிருமி தொற்றியிருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்