Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூ சவுத் வேல்ஸில் கிருமிப்பரவல் மெதுவடைந்துள்ளதா? - குழப்பத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகள்

நியூ சவுத் வேல்ஸில் கிருமிப்பரவல் மெதுவடைந்துள்ளதா? - குழப்பத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகள்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், தினசரி கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவதுபோல் இருந்தாலும், கிருமிப்பரவல் மெதுவடைந்துள்ளதா என்பதில் மருத்துவ அதிகாரிகள் குழப்பமாக உள்ளனர்.

முன்னதாக, நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த வாரம் உச்சத்தை
எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 1,100க்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாயின.

இருவர் மாண்டனர்.

அங்கு 16 வயதிற்கு மேற்பட்ட சுமார் 80 விழுக்காட்டினர் ஒரு முறை தடுப்பூசி போட்டுள்ளனர்.

46 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 445 சம்பவங்கள் பதிவாயின.

மேலும் இருவர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்