Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பணிக்காகச் சிறைவாசம் அனுபவித்த செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொடுக்கப்பட்ட பணியை மேற்கொண்டதற்காகச் சிறைக்குச் சென்ற செய்தியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  

வாசிப்புநேரம் -
பணிக்காகச் சிறைவாசம் அனுபவித்த செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோப்புப் படம்: REUTERS/Ann Wang

நியூயார்க்: கொடுக்கப்பட்ட பணியை மேற்கொண்டதற்காகச் சிறைக்குச் சென்ற செய்தியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

இம்மாதம் முதலாம் தேதி வரையில், 251 செய்தியாளர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Committee to Protect Journalists எனும் அமெரிக்க இலாப-நோக்கமற்ற அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கை அதனைத் தெரிவித்தது. 

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரின் மியன்மார் சிறைவாசம் அனைத்துலகக் கண்டனத்தைப் பெற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியாளர்களில் பாதிக்கும் அதிகமானோர் துருக்கி, சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் வேலை செய்தவர்கள்.

அவர்கள் அங்கு அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

அதேநேரத்தில், பொய்த் தகவல் கொடுத்ததற்காகச் சிறை சென்றவர்களின் எண்ணிக்கை 28க்கு உயர்ந்தது. கடத்த ஆண்டு அது 21ஆக இருந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்