Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவுடன் கொண்டிருந்த தனிமைப்படுத்தப்படத் தேவையில்லாத பயண நடைமுறையை நியூசிலந்து தற்காலிகமாக ரத்து

ஆஸ்திரேலியா : நியூ சவுத் வேல்ஸில் இவ்வாண்டின் ஆக அதிகமான தினசரிக் கிருமித்தொற்றுப் பாதிப்பு

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவுடன் கொண்டிருந்த தனிமைப்படுத்தப்படத் தேவையில்லாத பயண நடைமுறையை நியூசிலந்து தற்காலிகமாக ரத்து

படம்: REUTERS

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் புதிதாக 136 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதுவே இவ்வாண்டு பதிவாகியிருக்கும் ஆக அதிகமான தினசரி எண்ணிக்கை.

மாநிலத்தில் நெருக்கடிநிலை ஏற்பட்டிருப்பதாக அதன் முதல்வர் கூறியுள்ளார்.

வரும் 30ஆம் தேதி முடிவடையவிருந்த முடக்கநிலை மேலும் நீட்டிக்கப்படலாம் என்றார் அவர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் கொண்டிருந்த தனிமைப்படுத்தப்படத் தேவையில்லாத பயண நடைமுறையை நியூசிலந்து தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் சம்பவங்களால் அந்த நடைமுறை 8 வாரங்களுக்கு நிறுத்தப்படும்.

இன்று நள்ளிரவிலிருந்து அது நடப்பிற்கு வரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்