Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு

அமெரிக்காவில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.  

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு

(கோப்புப் படம்: AFP/Patrick T Fallon)

அமெரிக்காவில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

நியூயார்க் சுகாதாரத்துறை அதிகாரிகள், சமயக் காரணங்களுக்காகத் தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

அந்த மாநிலத்தின்மீது சுமார் 17 சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்குத் தொடுத்திருந்தனர்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டம், மத்திய அரசாங்க சிவில் உரிமைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் தங்கள் உரிமைகளை அது மீறியிருப்பதாக அவர்கள் கூறினர்.

வேலையிடத்தில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் மாநிலத்தின் முடிவு, சமயத்தின் அடிப்படையில் முதலாளிகளிடமிருந்து விலக்குப் பெறும் அவர்களின் உரிமைக்கு எதிரானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அமெரிக்காவில் சுமார் பாதி மாநிலங்கள், சில ஊழியர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ளன.

இதற்கிடையே, டெக்சஸ் நீதிபதி ஒருவர், சமயத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து விலக்குப் பெற்ற ஊழியர்களைச் சம்பளமற்ற விடுப்பில் அனுப்ப United Airlines நிறுவனம் எடுத்த முடிவுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்