Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து விமான நிலைய ஊழியருக்குக் கிருமித்தொற்று

நியூஸிலந்தின் ஆக்லந்து விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்து விமான நிலைய ஊழியருக்குக் கிருமித்தொற்று

(கோப்புப் படம்: REUTERS/Fiona Goodall)

நியூஸிலந்தின் ஆக்லந்து விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலந்துக்கும் இடையே இருவழிப் பயண ஏற்பாடு நேற்று தொடங்கியது.

அந்த ஊழியர், ஏற்கெனவே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

கிருமிப்பரவல் உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார் என, நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்தார்.

வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனையில், அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

இதற்கு முன்னதாக, இம்மாதம் 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அவரது தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகள் தொடர்வதாகத் திருவாட்டி ஆர்டன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாட்டை நிறுத்துவது குறித்து அவர் ஏதும் கருத்துரைக்கவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்