Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்துப் பொதுத்தேர்தல்: பிரதமர் ஜசிண்டா ஆர்டன் மாபெரும் வெற்றி

நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசிண்டா ஆர்டனின் (Jacinda Ardern) தொழிற்கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
நியூசிலந்துப் பொதுத்தேர்தல்: பிரதமர் ஜசிண்டா ஆர்டன் மாபெரும் வெற்றி

(கோப்புப் படம்: AP/Mark Baker)

நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசிண்டா ஆர்டனின் (Jacinda Ardern) தொழிற்கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

எதிர்த்தரப்புத் தலைவர் ஜுடித் கொலின்ஸ் (Judith Collins) தோல்வியை ஒப்புக்கொண்டார்.

நியூசிலந்து மக்கள், தொழிற்கட்சிக்குக் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறிய பிரதமர் ஆர்டன், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பிரதமரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக் கூறியதாகத் திருவாட்டி கொலின்ஸ் சொன்னார்.

80 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் வழிநடத்தும் தொழிற்கட்சி, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆளும் தொழிற்கட்சி, பாதிக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றினால் பிரதமர் ஆர்டன், தற்போதைய ஆட்சி முறையில் முதன்முறையாக ஒற்றைக் கட்சி அரசாங்கத்தை அமைக்க இயலும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்