Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவுடனான எல்லையை நாளை மீண்டும் திறக்கிறது நியூசிலந்து

நியூசிலந்து சுமார் ஓராண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவுடனான தனது எல்லைப் பகுதிகளை நாளை மீண்டும் அதிகாரபூர்வமாகத் திறக்கிறது.

வாசிப்புநேரம் -

நியூசிலந்து சுமார் ஓராண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவுடனான தனது எல்லைப் பகுதிகளை நாளை மீண்டும் அதிகாரபூர்வமாகத் திறக்கிறது.

பயணிகள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அந்த இரு நாடுகளுக்கும் இடையே இருவழிப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

இருநாடுகளின் பயணத்துறைக்கும் அது முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா செல்ல விரும்புவோர் குறைந்தது 3 நாளுக்கு முன்னர் இணையத்தில் பயண விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தொடர்புத் தகவல்கள், சுகாதாரம் பற்றிய கேள்விகள், கடந்த 14 நாள்களில் நியூசிலந்தைவிட்டு வெளியே சென்றதுண்டா என்பன போன்ற விவரங்கள் அதில் திரட்டப்படும்.

விமான நிலையத்தில் பயணிகள் அந்தப் படிவத்தைக் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்