Images
  • nz covid
    (படம்: Sanka VIDANAGAMA / AFP)

COVID-19: இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்தது நியூஸிலந்து

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்று அதிகரித்ததால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூஸிலந்து தற்காலிகத் தடை விதித்துள்ளது.

அந்தத் தகவலை நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் ஆக்லந்தில் நடந்த ஊடகச் சந்திப்பில் வெளியிட்டார்.

பயணத்தடை அதன் குடிமக்களுக்கும் பொருந்தும்.

தடைக்காலம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.

நியூஸிலந்தில் இன்று புதிதாக 23 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் 17 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

சமூக அளவில் சுமார் 40 நாள்களாக நியூஸிலந்தில் எந்த நோய்த்தொற்றுச் சம்பவமும் ஏற்படவில்லை.

-Reuters 

Top