Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கிருமிப்பரவல் சம்பவங்கள் மேலும் அதிகரித்த பிறகே மெதுவடையும்': நியூசிலந்துப் பிரதமர்

நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாட்டில் கிருமிப்பரவல் சம்பவங்கள் மேலும் அதிகரித்த பிறகே அவை மெதுவடையும் என்று கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
'கிருமிப்பரவல் சம்பவங்கள் மேலும் அதிகரித்த பிறகே மெதுவடையும்': நியூசிலந்துப் பிரதமர்

(படம்: REUTERS/Loren Elliott/POOL/File Photo)

நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாட்டில் கிருமிப்பரவல் சம்பவங்கள் மேலும் அதிகரித்த பிறகே அவை மெதுவடையும் என்று கூறியுள்ளார்.

COVID 19 தொடர்பான முதல் அனுபவத்தின் மூலம் அது தெரியவந்ததாக அவர் வெல்லிங்டனில் (Wellington) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

உள்ளூரிலேயே அங்கு மேலும் 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நியூசிலந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லந்து முடக்கப்பட்டது.

நேற்று அங்கு மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகள், மூன்று நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டன.

நகரத்தில் 10 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்லந்தைச் சேர்ந்தவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆக்லந்திலுள்ள தாதிமை இல்லங்கள் மூடப்பட்டுள்ளன.

அங்குள்ள மூத்தோரைப் பாதுகாப்பதற்கு அதுவே சிறந்த வழி என்று திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தாதிமை இல்லங்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்