Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2 மில்லியன் டாலர் மதிப்புமிக்க போதைப்பொருள் பொட்டலங்கள் நியூசிலந்து கடற்கரையோரத்தில்

2 மில்லியன் டாலர் மதிப்புமிக்க கொக்கைன் போதைப்பொருள் பொட்டலங்கள் கடந்த வாரம் நியூசிலந்து கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -
2 மில்லியன் டாலர் மதிப்புமிக்க போதைப்பொருள் பொட்டலங்கள் நியூசிலந்து கடற்கரையோரத்தில்

படம்: AFP

2 மில்லியன் டாலர் மதிப்புமிக்க கொக்கைன் போதைப்பொருள் பொட்டலங்கள் கடந்த வாரம் நியூசிலந்து கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தப் பொட்டலங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து கிட்டத்தட்ட 2,100 கிலோமீட்டர் தொலைவுக்குக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு நியூசிலந்தில் கரையொதுங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுவரை 20 கொக்கைன் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு சுமார் 2 மில்லியன் டாலர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொட்டலங்கள் ஆக்லந்தின் பெத்தேல்ஸ் கடற்கரையில் (Bethells Beach) கண்டெடுக்கப்பட்டன.

அந்த வட்டாரத்தில் மேலும் பொட்டலங்கள் ஏதும் கரையொதுங்கி உள்ளனவா என்று, காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடிவருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக நியூசிலந்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்