Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்தில் 6 வாரம் காணாத அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பு... முடக்கநிலை நீட்டிக்கப்படுமா?

நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் 6 வாரம் காணாத அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் 6 வாரம் காணாத அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதனால் அங்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

தற்போது, ஆக்லந்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் உள்ளனர். அங்கு டெல்ட்டா வகைக் கிருமிப்பரவலை முறியடிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆக்லந்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அது இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று நினைக்கவில்லை என நியூஸிலந்துத் துணைப் பிரதமர் கிரான்ட் ராபர்ட்சன் (Grant Robertson) கூறினார்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட வீடுகளில் அதிகமானோர் கூடியதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

இந்நிலையில், ஆக்லந்துவாசிகள், மூன்றாம் கட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவசரத் தேவைகளுக்காக மட்டும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று திரு. ராபர்ட்சன் சொன்னார்.

ஆக்லந்தில் 24 மணி நேர இடைவெளியில், புதிதாக 71 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்