Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து: கிருமித்தொற்று விழிப்புநிலை தொடர்பிலான அறிவிப்பு இன்று எதிர்பார்க்கப்படுகிறது

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாட்டின் கிருமித்தொற்று விழிப்புநிலை குறித்து இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாட்டின் கிருமித்தொற்று விழிப்புநிலை குறித்து இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்ட்டா வகை நோய்ப்பரவல் சம்பவங்களால், ஆக்லந்தில் உயர்விழிப்புநிலை தொடர்ந்து நடப்பிலிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வல்லுநர்கள் கூறினர்.

நியூஸிலந்தின் ஏனைய பகுதிகள் மிதமான விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டென்மார்க்கிடமிருந்து அரை மில்லியன் முறை போடுவதற்குத் தேவையான Pfizer தடுப்புமருந்துகளை வாங்க நியூஸிலந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே ஸ்பெயினுடன் 250,000 Pfizer தடுப்புமருந்துகளை வாங்க அது ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த இரண்டு ஒப்பந்தங்களால், மக்களுக்குச் சீராகத் தடுப்பூசி போடும் வலுவான நிலையை நியூசிலந்து பெற்றிருக்கும் என்று பிரதமர் ஆர்டன் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்