Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்தில் புதிய சுதந்திரம்... அதிகரிக்கும் COVID-19 தொற்றுச் சம்பவங்களுக்கிடையிலும் முடக்கநிலை நீக்கம்

நியூஸிலந்து இன்று முடக்கநிலையிலிருந்து நீங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -

நியூஸிலந்து இன்று முடக்கநிலையிலிருந்து நீங்கியுள்ளது.

அங்கு கிருமித்தொற்றுக்கு ஆளாவோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.

என்றாலும் சுமார் நான்கு மாதங்களாக நீடித்த முடக்கம் அதிகாரபூர்வமாகத் தளர்த்தப்பட்டுள்ளது.

நியூஸிலந்தில், இன்றுமுதல் புதிய சாலைப் போக்குவரத்து விளக்கு முறை பின்பற்றப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதம், கிருமிப்பரவல் நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் வட்டாரங்கள் வண்ணங்களாக வகைப்படுத்தப்படும்.

ஆக்லந்தின் சில பகுதிகள் உச்ச விழிப்பு நிலைக்கான சிவப்பு வண்ணத்தில் உள்ளன.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் உணவகங்கள், காப்பிக் கடைகள், மதுக்கூடங்கள் போன்ற இடங்களுக்குச் சென்றுவரத் தடையில்லை.

பெரும்பாலான மாநிலங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வெளியிடங்களில் ஒன்றுகூடுவதற்கான வரம்பு நீக்கப்படுகிறது.

அபாயம் ஏதுமில்லை என்பதற்கான பச்சை வண்ணத்தில் நியூஸிலந்தின் எந்தப் பகுதியும் வகைப்படுத்தப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்